Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘என் இனிய தேசம்’ Category

Read Full Post »

 அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
=================================================================

முதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை


 

“உயிர் வலிக்க வலிக்க…”

‘க்ளியர் வின்னர்’ என்று இந்தப் படைப்பினைச் சொல்லலாம் – கிட்டத்தட்ட
போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல.

மனதை உலுக்குகிற படைப்பு. இனப்பிரச்சினைகளை மிகச் சிறப்பாய்
எடுத்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளி. மொழிபெயர்த்து சேவை
நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வளவு நேர்த்தி.

கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…

எனக்குள்
அதிர்கிறது!!!

காட்சி நம்மையும் அதிரவைக்கிறது. அதுதான் இந்தப் படைப்பின் வெற்றி.
ஒவ்வொரு படமும் ஒரு அகதியின் அத்தியாயத்தை அழுத்தமாய்ப் பேசுகிறது –
வார்த்தைகளின் தேவை இல்லாமலே! வார்த்தைகளும் சேர்ந்து கொள்ளும்போது கனம்
தாங்காமல் மனது மௌனமாய் சுருண்டு கொள்கிறது.

உன்
ஞாபகத்தூறலோடு
நடக்கிறேன்…

நான்
இன்னும்
நீண்ட தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது!!!

(ஞாபகத் தூறல்… என்ன அழகான வார்த்தைப் பிரயோகம்!) இப்படி கவிதை
முற்றுப் பெறும் பொழுது நெஞ்சு வெறிச்சென்றிருக்கிறது. எல்லாவற்றையும்
இழந்துவிட்டு, வெறும் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நீண்ட தூரம்
செல்ல வேண்டிய வலியை உணரமுடிகிறது.

இந்தக் கவிதையைத் தனியாய்ப் படித்திருந்தால் இப்படி ஒரு தாக்கம்
ஏற்பட்டிருக்காது… இதுதான் இந்தக் காட்சிக் கவிதையின் வெற்றி

முகத்திலறைகிற புகைப்படங்களை அழகாகக் கோத்து, உயிரைத் தொடுகிற சோகத்தைப்
பின்னணி இசையில் புகுத்தி, இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளால்
கட்டியெழுப்பி படைப்பினை நம் மனதுக்குள் ஒரு தாஜ்மஹால் போலப்
பிரமாண்டமாய் இருத்திவிடுகிறார் இயக்குநர். பிரத்யேகமாய் வீடியோ எதுவும்
பதிவு செய்யாமலேயே இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதீத திறமை தேவை.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

கவிதை இன்னும் சற்று கோர்வையாக இருந்திருக்கலாம் என்பதைத் தவிர எனக்குக்
குறையேதும் தெரியவில்லை.

அன்புடன்
நிலா

 இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்ஆறுதல் பரிசு 1 :கார்த்திக் பிரபு, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

சோ. சுப்புராஜ், துபாய்

இரண்டாம் பரிசு :

தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை

முதல் பரிசு :

ஜாபர் அலி, துபாய்

ஊக்கப்பரிசு :

லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை

உஷா, சென்னை

மாதங்கி, சிங்கப்பூர்

கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா

நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்

மேரித் தங்கம், சென்னை

இளா, நாமக்கல்

அருட்பெருங்கோ, சென்னை

மதுமிதா, சென்னை

இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்

ஆறுதல் பரிசு 1 :

பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்

ஆறுதல் பரிசு 2 :

பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி

இரண்டாம் பரிசு :

பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ

முதல் பரிசு :

பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி

ஊக்கப் பரிசு 1:

கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி

ஊக்கப் பரிசு 2:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி

ஊக்கப் பரிசு 3:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை

ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்

ஆறுதல் பரிசு 1 :

கவிஞர் மதுமிதா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

V. லஷ்மணக்குமார், மதுரை

இரண்டாம் பரிசு :

ஷைலஜா, பெங்களூர்

முதல் பரிசு :

மு. பாண்டியன், நெய்வேலி

படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்

ஆறுதல் பரிசு 1 :

கே. வி. உஷா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

மு. பாண்டியன், நெய்வேலி

இரண்டாம் பரிசு :

சோ. சுப்புராஜ், துபாய்

முதல் பரிசு :

மேரித் தங்கம், சென்னை

காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா

ஆறுதல் பரிசு 1 :

கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா

ஆறுதல் பரிசு 2 :

ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா

இரண்டாம் பரிசு :

முத்துலட்சுமி , புது தில்லி

முதல் பரிசு :

சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை

போட்டி முடிவு கண்டதும் பேச முடியவில்லை……
அழத்தான் முடிந்தது……..

காத்திருப்பு முடிவுக்கு வரும் போது வரும்
கண்ணீர் அது.
எத்தனையோ போட்டிகளில் வென்ற
போது ஏற்படாத சந்தோஷம் `அன்புடன்`போட்டியில்
வெற்றி என்றதும் பொங்கி எழுந்தது.
தொடர்ச்சியாக   மடலிட்டுக்கொண்டிருந்தஎன்னை    உறையச்செய்து விட்டது
போட்டி முடிவு.
இணையம் இரு வருடங்களாய்த்தான் பரீட்சயம்.
அதிலும் தமிழ் இணையம் கடந்த மாதம் தான்
அறிமுகம்.
உலகு தழுவிய போட்டி ஒன்றில் பங்கு
கொண்ட முதல் தடவையே பரிசு கிடைத்தால்………..
வார்த்தைகள் பெரிதாய் எதை  சொல்லவிடப்போகின்றன
அதனால் மெளனிக்கிறேன்.

எமது நாட்டுத் தினசரி ஒன்றில் கவிதைப் போட்டி அறிவிப்பு ஒன்றைக்
காண நேர்ந்தது.பின் அந்த குறிப்பிட்ட தாளைக் காணவில்லை.
இணையத்தில் அந்தப் போட்டி பற்றிய தகவல் கிடைக்குமா என்ற நப்பாசையில்
`கூகிள்`இல் தேட அன்புடன் போட்டி அறிவிப்பு என்
விழிகளில் சிக்கியது.

அடி நுனி புரியாமலே அன்புடனில் இணைந்து கொண்டேன்.
உள்ளே போன் பின் தான் புரிந்தது `அன்புடன்` எத்துணை
அருமையான     களம்    என்பது.

சிந்திக்கவும் சிரிக்கவும் தன்னைத்தண்ணீரூற்றி  வளர்க்கவுமான அன்புடன்
பாத்தியில் நானும் ஒரு விதையாய் என்னை ஊன்றிக் கொண்டேன்.
சேர்ந்த முதல் நாளே ஆர்வமிகுதியால் ஈ கலப்பை தரவிறக்கம் செய்து அன்றே
யுனித்தமிழில் தட்டச்சக் கற்றுக் கொண்டது நெஞ்சில் மறக்காத
நினைவு……..

முதன் முதல் மணித்தியாலக் கணக்காய் கணணித்திரையை விட்டு விழி இறங்க
மறுத்து வீட்டில் குட்டு வாங்கியதும் அன்று தான்.

இயல் கவிதை,படக்கவிதை -இரண்டு பிரிவுகளிலும் கலந்து கொண்டேன்.
மற்றப்பிரிவுகள் எனக்கு சம்பந்தம் இல்லாதவை என்று இருந்து விட்டேன்.
என் `உள்ளங்கைச் சூடு` என்ற இயல் கவிதைக்கு பரிசு கிடைக்கும் என்ற
நம்பிக்கை இருந்தது.
(என்னைப் பொறுத்தவரை அன்புடனில் இணைந்ததே போட்டியொன்றில் வெற்றி பெற்றது
போலத்தான் என்பது வேறு விடயம்)

காட்சிக் கவிதைக்கான நினைவூட்டல்களை அடிக்கடி கண்டதும் மனதுக்குள் ஒரு
குறுகுறுப்பு.
`சரி செய்து தான் பார்ப்போமே` என்ற அடிமனத்துடிப்பு வந்தது.
முடிக்கவேண்டிய வேலைகளையெல்லாம் ஒரு பக்கம் தூக்கி வைத்து விட்டு
உட்கார்ந்த போது போட்டி முடிய இரு தினங்களே மீதமிருந்தன.

ஏற்கனவே விளையாட்டாக சில குடும்பப் படங்களை வைத்து ` Windows Movie
Maker  `இல் செய்திருந்த முயற்சிகள் கைகொடுத்தன.

படங்களைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு இரவு முழுக்க முதுகு வலிக்க வலிக்க `காட்சிக் கவிதையைத் தயாரித்து,
முடிவடைய இப்போதோ அப்போதோ என்று இருந்த நேரம்
 `Windows Movie Maker` தானாக மூடிக்கொண்டது.கவிதை வரிகளை கூட வேறாக
எழுதி வைத்திருக்கவில்லை.`சரி நமக்கு இது சரி வராது` என்று சோர்ந்து
போனேன்.

அடுத்த நாள் மீண்டும் அடிமனத்துடிப்பு…….
மீண்டும் புதிய வேகத்துடன் புறப்பட்டேன்.
முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன்.
இந்த முறை வேறு ஏதோ பிரச்சினை….
ஓரிடத்தில் காட்சி `முன் பின் நகரமாட்டேன்` என்று அடமாய் நின்று விட்டது.
கண்ணீர் வந்தது……
கவிதை வரிகளை யாபகித்து யாபகித்து எழுதி வைத்தேன்.
புகழனைத்தும் இறைவனுக்கே……
மூன்றாம் முறை அழகாய் வந்து விட்டது.
கடைசி நேரம்
சேதுவையும் ப்ரியனையும் சுமார் மூன்று மணி நேரம் `உயிர் வலிக்க வலிக்க
`கஷ்டப்படுத்தித் தான் தரவேற்ற முடிந்தது……
கவிதையின் பின்னணி பற்றி இப்போது நினைத்தாலும் `சுரீர்` என்றொரு ஊசி
இதயத்தைக் குத்திச் செல்கிறது.
 தான் ஓடி விளையாடிய மண் தனக்கு மறுதலிக்கப் படும் அநீதி ஈடு செய்ய
முடியாத சோகம்.
இலங்கையில் `இடம் பெயர்தலும் அகதி வாழ்வும்` இந்து முஸ்லிம் இன
வேறுபாடின்றி சொத்தான அவலங்கள்.
அகதி வாழ்வை அனுபவித்ததில்லை……
ஆனால் அந்த சுடும் நிஜங்களை நேரில் கண்டிருக்கிறேன்.
`என் கூட்டாளிப் பொடியனை இப்படித்தான் சுட்டாங்க ராத்தா`என்று சித்திரம்
வரைந்த நான்கு வயது மொட்டைக் கண்டு உள்ளுக்குள் அழுதிருக்கிறேன்.
அங்கெல்லாம் கண்ட கேட்ட குமுறல்களின் ஒர் துளியைத்தான்
கபனிட்ட அந்தச் சின்னவன் முகம் என் மனப்பள்ளத்தாக்கின் ஆழமான
பிரதேசத்தில் இன்னுமே புதைந்து கிடக்கிறது.

எனக்கு கவிதை தான்……
இழந்தவர்களுக்கு?

என் இனிய நன்றிகள்……………………………….

இறைவன் ஒருவனுக்கே என் தலை தாழ்த்தல்கள்!!!

எனக்குள் இருக்கும் `என்னை` கண்டெடுத்த என் ப்ரியமான உம்மா,வாப்பா
தன்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று அன்புக்கட்டளை தந்திருக்கும்
இனியவருக்கு………

என்னை போஷித்து வளர்த்த ,வளர்க்கும் ஆசிரியர்கள்
என்னை எப்போதும் ஊக்குவிக்கும் என் இனிய சகோதரிகளுக்கு
அன்பு இதயங்களுக்கு…

அரவணைக்கும் `அன்புடன்` குடும்பத் தலைவர்கள்
புகாரி அண்ணா

சேது
ப்ரியன்

என் கவிதைக்கு அழகிய உரை தந்த நிலாவுக்கு…….
மற்றைய நடுவர்களுக்கு

மறக்க முடியாத அன்புடன் நண்பர்களுக்கு

Read Full Post »