Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2008

 

நிலா காயும் முன்னிரவில்….
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!

என்
ஆன்மாவுக்குள் பீறிட்ட
சின்ன நீரூற்றின்
பிரவாகம்….
கரை உடைக்கிறது!!!

தாகம்!
தாகம்!

முளையாய்
அரும்ப முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!
 
தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்…
என் கனவுகள்!!!
 
ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!

இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல் ஓடும்
வாழ்க்கை….
ஒற்றையடிப்பாதையாய்…..
 

ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்த
பாதங்கள்!

ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!
 
ஆண் அல்ல
என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!

திறமை வெள்ளத்தின்
வீச்சை
மூச்சடக்கி……
துளித்துளியாய்…
தேவைகளில் பெய்!!

பிரார்த்தனை விழிகளின்
ஈரத்தில்…
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்….
ஒரு
தாய்ச்சிறகின்
கதகதப்பாய்….
என் தொழுகை!!!!

வானம்
தொட்டு விடத்
துடிக்கும் உள்ளமே!!
நில்!!
அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

copyrights@shameela_yoosufali

Read Full Post »

தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த நேர்காணலை இங்கிருந்து நீக்க வேண்டியிருக்கிறது.

மன்னிக்கவும்

சகோதரி மாரியா அவர்கள்
PAS எனப்படும்Islamic  party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர்.
மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர்.
IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர்.
தொழிலால் ஒரு மருத்துவர்,ஆறு பிள்ளைகளின் தாய் ,இவரது கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர்

மென்மையான புன்னகை.
கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை.
ஆர்பாட்டமில்லாத அழகிய ஆங்கிலம்
தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துக்கள்.
காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக்கொள்ளும் ஆளுமை.
இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத்.


 The contents of the interviw are removed from here due to some unavoidable circumstances.PLEASE BE KIND ENOUGH TO ACCEPT MY APPOLOGIES

 
சகோதரி மாரியா இஸ்லாமியப்பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் இறைநெறிப்போராட்டத்துக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.
நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன்
விடைபெற்றோம்.
 நேர் கண்டவர் சமீலா யூசுப் அலி
 

Read Full Post »