இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்!
புதன், 02 ஜனவரி 2008
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு
ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சி மிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்ததின் மறுபெயர்தான் இளமை.
இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். எதிர்காலத்தை எழுதும் பேனாக்கள்தான் இளைஞர்கள் என்று கூறினால் மிகையாகாது.
“உன்னை ஐந்து நிகழ்வுகள் அடையுமுன் ஐந்து அருட்கொடைகளை சிறப்பாகப் [...]
முழு பதிவையும் வாசிக்க »
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
=================================================================
முதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை
“உயிர் வலிக்க வலிக்க…”
‘க்ளியர் வின்னர்’ என்று இந்தப் படைப்பினைச் சொல்லலாம் – கிட்டத்தட்ட
போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல.
மனதை உலுக்குகிற படைப்பு. இனப்பிரச்சினைகளை மிகச் சிறப்பாய்
எடுத்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளி. மொழிபெயர்த்து சேவை
நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வளவு நேர்த்தி.
கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…
எனக்குள்
அதிர்கிறது!!!
காட்சி நம்மையும் அதிரவைக்கிறது. அதுதான் இந்தப் படைப்பின் வெற்றி.
ஒவ்வொரு படமும் ஒரு அகதியின் அத்தியாயத்தை அழுத்தமாய்ப் பேசுகிறது -
வார்த்தைகளின் தேவை இல்லாமலே! வார்த்தைகளும் [...]
முழு பதிவையும் வாசிக்க »