The sun has begun to go down.
The street is suddenly all alive with the air of breaking fast.
It was just another evening of Ramadhan.
sChildren carrying ‘kanji’ buckets were coming from the mosque.
The aroma of finely fried cutlets and patties start teasing my taste buds.
I looked at the clock in the front hall.
Still almost one hour [...]
முழு பதிவையும் வாசிக்க »
நேற்றிரவு மின்சாரம் அறுந்து போனது….
அடிக்கடி கிண்கிணுக்கும் அலைபேசியை அறையிலேயே வைத்து விட்டு வெளியே வருகிறேன்.
லேசாக மழை தூரல்……
சட்டென்று இறுகிப் போன முகத்தை ஒரு புன்னகை தொட்டுச்செல்கிறது.
இறைவனைப் புகழ்ந்துகொள்கிறேன்.
இறைவா
மாற்றங்களை ஏற்க மறுக்கின்ற குறுகிய மனத்தை எனக்குத் தந்து விடாதே
என் மனம் உள்ளுக்குள் இருகரமேந்துகிறது.
புதிதாக ஒன்றை செய்ய முடியாது.
சிந்திக்கக் கூட முடியாது.
அது சரிவராது…
வழமையானபடியே செய்வோமே…
இவ்வளவு காலம் இதைத் தானே செய்தோம்
இப்படியானவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது பெரிய சவால்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்புக்கடிததைத் தயாரிக்க நேரிட்டது.
நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிகழ்ச்சி.
சம்பிரதாயமான அலுவலகக்கடிததிலிருந்து [...]
முழு பதிவையும் வாசிக்க »
இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்!
புதன், 02 ஜனவரி 2008
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு
ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சி மிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்ததின் மறுபெயர்தான் இளமை.
இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். எதிர்காலத்தை எழுதும் பேனாக்கள்தான் இளைஞர்கள் என்று கூறினால் மிகையாகாது.
“உன்னை ஐந்து நிகழ்வுகள் அடையுமுன் ஐந்து அருட்கொடைகளை சிறப்பாகப் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - உண்மையா ?
மிக அழகான கேள்வி.
என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..
நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை -
இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.
நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன – இது உண்மை!
அனுபவித்துச் சுவைத்த உண்மை .
எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோ
அதை நாம் அடைகிறோம்………
என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.
வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | 1 மறுமொழி »
4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சில
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..
கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..
வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும் இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.
எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.
அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……
உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.
இனியவர்களின் ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….
எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
3. மகள், மனைவி, தாய், தோழி – என்ற வெவ்வேறு நிலைகளில் பெண்மையின் உன்னதம் எந்த நிலையில் உயர்வையும் மன நிம்மதியையும் அடைகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
உண்மையில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வினா…….. பெண்மையின் உன்னதம் உயர்வும் நிம்மதியும் ,இந்த நிலைகளை அடைவதில் அல்ல இந்த நிலைகளில் ஒரு பெண்ணின் மனோபாவம் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
சுயநலமற்ற நேசம்……
உள்ளார்ந்த அன்பு……..
தலைகோதி நெஞ்சின் சிடுக்கெடுக்கும் விரல் நுனிகள்…. இதயம் உடைந்து விம்மும் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
2. நமது வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று விதியை நீங்கள்
நம்புகிறீர்களா இல்லை நமது உழைப்பும் முயற்சியும் மட்டுமே நம்
எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று நினைக்கிறீர்களா ? இறைவன் ஒருவன் இருப்பதை நான் எந்தளவுக்கு உயிரில் சுமந்திருக்கிறேனோ அந்தளவுக்கு விதியையும் நான் விசுவாசிக்கிறேன்.
விதி என்பது என்ன?
இறைவனின் நாட்டமும் மனிதனின் முயற்சியும் சந்திக்கும் தொடுபுள்ளி .
விதிக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்கள் இருந்தாலும் விதியைக் காரணம் காட்டி உழைப்பையும் உற்சாகத்தையும் இழப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இறைவனுடைய நாட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது உண்மை தான்:அந்த ஏட்டில் இருப்பது என்ன என்பது எமக்குத்தெரியாது……………
எனவே
உழைக்கும் போது நம் கை மட்டுமே [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
அன்பு சகோதரி ஹயா..இதோ உங்களுக்கான ஐந்து கேள்விகள்.
1. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று இந்த சமூகம் என்றாவது உங்களை
நினைக்கவைத்திருக்கிறதா ?
அருமையான பதில்களால் எங்கள் உளம் தொட்டு பின் சிந்தனைச் சிறகுகளை அகல
விரித்துப் பறக்க வானம் தரும் உங்கள் கேள்விகள் என் கதவு தட்டுகின்றன.
நன்றிகள் சகோதரர் ஷாஜஹானுக்கு!!!
இறைவனுக்கே புகழனைத்தும்.
பெண் குழந்தைகளை விரும்பி வளர்க்கும் ஒரு பெற்றோருக்கு நான் பிறந்தது என்
பாக்கியம்.
சூழலில் வேறு பெண்குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டு கொண்டே
நான் வளர்ந்தேன்.
எனக்கு சகோதரர்கள் இல்லை:சகோதரிகள் மாத்திரம் தான்.
எப்போதாவது ` நான் ஏன் [...]
முழு பதிவையும் வாசிக்க »
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
=================================================================
முதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை
“உயிர் வலிக்க வலிக்க…”
‘க்ளியர் வின்னர்’ என்று இந்தப் படைப்பினைச் சொல்லலாம் – கிட்டத்தட்ட
போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல.
மனதை உலுக்குகிற படைப்பு. இனப்பிரச்சினைகளை மிகச் சிறப்பாய்
எடுத்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளி. மொழிபெயர்த்து சேவை
நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வளவு நேர்த்தி.
கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…
எனக்குள்
அதிர்கிறது!!!
காட்சி நம்மையும் அதிரவைக்கிறது. அதுதான் இந்தப் படைப்பின் வெற்றி.
ஒவ்வொரு படமும் ஒரு அகதியின் அத்தியாயத்தை அழுத்தமாய்ப் பேசுகிறது -
வார்த்தைகளின் தேவை இல்லாமலே! வார்த்தைகளும் [...]
முழு பதிவையும் வாசிக்க »