Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

நவம்பர், 2007 க்கான தொகுப்பு

                                                 
அவிழத்துடித்த
ரோஜா மொட்டு
உதிர்ந்து விழுகிறது!
——-
அசைந்து ஆடி
கதை பேசிய
உன் கால்கள்….
தொய்ந்து கிடக்கின்றன!
—–
ஒரு
மூன்று மாதக்கனவு
கலைந்து போகிறது!
—–
காற்றுத்தேடி
களைத்துப் போன
குட்டி இதயம்
என்றைக்குமாய்
துடிக்க மறுத்தது!
——
`இப்போது விரியும்`
என்பதான
விழிச்சுவர்கள்
இறுகிக்கிடக்கின்றன!
—–
இரங்க மறுக்கும்
இருண்ட கதவுகளை
தட்டி தட்டி
சோர்ந்து போனதா
உன்
உயிரின் குரல்?
—–
உனக்காய் 
நாமெல்லாம்
உயிரில் நொந்ததை…
குருவிசேர்ப்பதாய்
காசு சேர்த்ததை….
காணச்சகியாமல்
ஒரேயடியாய்
உன் கண் மூடினாயா?
—–
வெள்ளைத்துணியில்
சுற்றி வைத்த
சிட்டுக்குருவியாய்
உன்
அசைவற்ற உடல்!
—–

– ஒரு
பனித்துளியின் பாடல்
போன்ற
உன் கன்னங்களில்
உறைந்து போகிறது
மனசு!
—–
இதோ…
உன்னைத்தூக்குகிறார்கள்…..
…………………..
கடைசி கடைசியாய்
நான்
கட்டறுந்து அழுகிறேன்……..
உன்னை
மண் தாங்கிக்கொள்கிறது…
……………………………
மலரைக் காம்பு தாங்குவதான
மென்மையுடன்
உன்னைத்தாங்கிக்கொள்கிறது!!!

————————————————————–
அல்லாஹ் போதுமானவன்!!!
பிஞ்சு ஹம்தாவைப் பிரிந்து வாடும் பெற்றோருக்கு
அல்லாஹ் அமைதியையும் மன உறுதியையும்
அளிக்க….
ஏந்துவோம் எம் கரங்களை!!!
                
         Shameela Yoosuf Ali
    http://hayah.wordpress.com/
It`s never too late for anything in life….

முழு பதிவையும் வாசிக்க »

நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்…..நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்….
இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்த
முத்தம்….
ஊசி ஊசியாய்
உறை பனி
பெய்யும்
மார்கழி இரவுகள்….
உனக்காய்…
தாகிக்கும்
என்
இதயம்….
இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?

முழு பதிவையும் வாசிக்க »

முழு பதிவையும் வாசிக்க »

முழு பதிவையும் வாசிக்க »

we

முழு பதிவையும் வாசிக்க »

Decide to be happy today,
to live with what  

is yours – your family, your business, your job. 

 I f you can’t have what you like,
maybe you can like what
you  have.

Just for today, be kind, cheerful, agreeable,
responsive, caring,
and understanding.

Be your best, dress your best, talk softly, look 
  
for the bright side of things.

Praise people for what they [...]

முழு பதிவையும் வாசிக்க »

Thought for the day…

Every day can be a beautiful day.
Just take a look around you
And think about all of the
Wonderful things you have
To be thankful for…
The sunshine,
Roses,
Laughter,
Close friends,
Family,
Music,
And beautiful dreams.
The storm is never
Half as bad as it seems.
Don’t let the rain ruin your day.
When the dark clouds move in
Just smile,
Because the good times
Are on the way.

Success is failure [...]

முழு பதிவையும் வாசிக்க »

நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !
வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவது
போல…..
ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !
இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….
கனவுகளின்
மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்
தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !
விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !
இந்த நிமிடம்…
இந்த செக்கன்….
இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….
பாரமற்றதாய்…..
எங்கோ இரையும்
ஒரு
வண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..
தூங்கி விழும்
அந்த
இலை மடியிலிருந்து…
ஒரு
`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !
இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!
விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!
செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!
புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்
இதயங்களில் தீட்டுங்கள் !!!

முழு பதிவையும் வாசிக்க »

தோதல் ஓயா என்று அழகிய இடம் எங்கள் ஊருக்கருகில் உண்டு…
இன்னுமும் மாசுபடாமல் இருக்கும் இந்த இயற்கையின் சீதனம் என்
ஒளிப்படக்கருவியினூடே……..

முழு பதிவையும் வாசிக்க »

Give a minute….

To My dearest brothers and sisters…..
Give me a minute……
ASSALALAMU ALIKUM WARAHMATHULLAH!!!
When a child  kisses the air of this beautiful world, leaving the warmth of the mothers’ womb
it brings bundles of hopes and happiness…..
The tears of joy in the eyes of the parents can not be measured but only treasured.
With rays of new hope and [...]

முழு பதிவையும் வாசிக்க »