ஆகஸ்ட், 2007 க்கான தொகுப்பு
இலங்கையின் தென்பகுதியில் ஏகாந்தமாய் எழுந்து நிற்கும் காலிக்கோட்டை
Posted in என் விழிப்படங்கள் on ஆகஸ்ட் 31, 2007 | Leave a Comment »
உயிரில் பூத்த தோழமை!!!
Posted in கவி`தை`, நட்பும் காதலும் on ஆகஸ்ட் 30, 2007 | 3 மறுமொழிகள் »
ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!
தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!
ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…
வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!
ஒரு சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!
தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!
காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!
ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!
அகதி
Posted in கவி`தை` on ஆகஸ்ட் 30, 2007 | 1 மறுமொழி »
சுட்டு விரல் பட்டு
சிலிர்க்கும்…
வேலியோர மொட்டுமல்லி!
விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!
வரும் போதெல்லாம்
தலை சிலுப்பி
வரவேற்கும்
முன் வாசல் வேப்ப மரம்!
என்
கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!
நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்
பதித்த
நதிக்கரை!
……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு அந்நியமாய்….
எனக்கெதிராய் சதி
செய்வதாய்…..
…………………….
………………………………
என் உயிர் முளைத்து
சடைத்த
என் தேசம்
எனக்கினி சொந்தமில்லை!!!
1998 ஜுலை 14
தூங்காத நினைவுகள்…
Posted in கவி`தை` on ஆகஸ்ட் 30, 2007 | Leave a Comment »
தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!
விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!
ஒட்ட வைத்த
சிரிப்பு…
உலர்த்திவைத்த
விழியோரங்கள்…
என்ன
வாழ்க்கை இது!
இன்னும்
ஏற வேண்டிய
இலக்குகள்
இதயம் பிராண்டும்!!!
`நான்`
எனக்கில்லாத அவலம்
அவசரமாய்
நினைவுக்கு வரும்!!!
என் நேற்றுக்கள்….
என் இன்றுகள்….
என் நாளைகள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???
என்
மெளனமே…
என் செவிகளுக்கு
இரைச்சலாயிருக்கிறது!!
இறைவா!!
எனக்கேன்
இத்தனை `சிறகுகள்`
தநதாய்
தங்கக் கூண்டில்
அடைத்து விட்டு???
காற்று துயில் கொள்கிறது!!!
Posted in கவி`தை` on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
சமீலா யூசுப் அலி
ஒரு
விடிவெள்ளி
உதிர்ந்து விழுகிறது!
அந்திச்சூரியன்
அமைதி கொள்கிறது!
பனியிலை மரங்கள்
தலைகுனிகின்றன!
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுகிறது!
மனப்பள்ளத்தாக்கில்
மண் சரிவு!
இன்னாலில்லஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்!!!
அல்லாஹ்
உங்களை
அழைத்துக் கொண்டான்!
கட்டற்ற காற்று
இமைக்க மறந்ததா?
மாரடைப்பு…
ஆஸ்பத்திரிக்கட்டில்…
அடுக்கடுக்காய் மாத்திரைகள்…
இத்தனைக்கும் மத்தியில்
இன்னும் காயாத
புன்சிரிப்பு!
மரணத்தால்
கவர முடிந்தது
உங்கள் ரூஹை மட்டும் தான்…
உங்கள் நினைவுகள்….
உங்கள் கனவுகள்….
உங்கள் புன்னகை….
இன்னும் பத்திரமாய்!!!
மரணத்தால்
கவர முடிந்தது
உங்கள் ரூஹை மட்டும் தான்…
அறுபதுகளிலும்
இருபதுகளின் திடம்!!!
தலை நரைத்தாலும்…
ஜமாஅத் பாசறையின்
நரைக்காத
இளைஞர்!!!
எப்போதாவது
சிணுங்கும் தொலைபேசியில்
எப்போதும்
சிரிக்கும்….
உங்கள் குரல்!
`அல்ஹஸனாத்தில்
என்
கன்னிக்கவிதை…
அழகாய் இருக்கிறது
இன்னும் எழுதுங்கள்`
உங்கள்
வார்த்தைக்கசிவுகள்…
சிலிர்க்கிறது மனசு!!!
முஸ்அபும் பிலாலும்
போல்
`பிரபோதய`வும்
ஒரு
பிள்ளை தான்
உங்களுக்கு!
எதிர்ப்பின் கத்திகளில்
தானே
நீங்கள்
அழுந்தி அழுந்தி
வைரமானீர்கள்!
ஐநூறு இதயங்கள்
அல்லாஹ்வை சுமக்க…
உங்கள் உள்ளம்
`அல்ஹம்துலில்லாஹ்`
சுமந்ததது!
சுவனத்தோட்டத்தில்
நம் ஜமாஅத்
சொந்தங்களை
கேட்டதாய் சொல்லுங்கள்!
இலட்சியப்பாதையில்
உங்கள்
காலடித்தடங்கள்….
மரணத்தால்
கவர முடிந்தது
உங்கள் ரூஹை மட்டும் தான்…
ஈர விழிகளின்
ஓரத்தில்…
உங்கள் ஞாபகங்களோடு
நாங்கள்
நடக்கிறோம்…..
இனி
நீங்கள்
நிம்மதியாய் தூங்குங்கள்
அமைதி பெற்ற
ஆத்மாவாய்…
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - உண்மையா ?
மிக அழகான கேள்வி.
என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..
நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை -
இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.
நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன – இது உண்மை!
அனுபவித்துச் சுவைத்த உண்மை .
எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோ
அதை நாம் அடைகிறோம்………
என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.
வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன [...]
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | 1 மறுமொழி »
4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சில
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..
கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..
வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும் இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.
எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.
அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……
உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.
இனியவர்களின் ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….
எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் [...]
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
3. மகள், மனைவி, தாய், தோழி – என்ற வெவ்வேறு நிலைகளில் பெண்மையின் உன்னதம் எந்த நிலையில் உயர்வையும் மன நிம்மதியையும் அடைகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
உண்மையில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வினா…….. பெண்மையின் உன்னதம் உயர்வும் நிம்மதியும் ,இந்த நிலைகளை அடைவதில் அல்ல இந்த நிலைகளில் ஒரு பெண்ணின் மனோபாவம் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
சுயநலமற்ற நேசம்……
உள்ளார்ந்த அன்பு……..
தலைகோதி நெஞ்சின் சிடுக்கெடுக்கும் விரல் நுனிகள்…. இதயம் உடைந்து விம்மும் [...]
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
Posted in என் மனச்சிதறல் on ஆகஸ்ட் 29, 2007 | Leave a Comment »
2. நமது வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று விதியை நீங்கள்
நம்புகிறீர்களா இல்லை நமது உழைப்பும் முயற்சியும் மட்டுமே நம்
எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று நினைக்கிறீர்களா ? இறைவன் ஒருவன் இருப்பதை நான் எந்தளவுக்கு உயிரில் சுமந்திருக்கிறேனோ அந்தளவுக்கு விதியையும் நான் விசுவாசிக்கிறேன்.
விதி என்பது என்ன?
இறைவனின் நாட்டமும் மனிதனின் முயற்சியும் சந்திக்கும் தொடுபுள்ளி .
விதிக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்கள் இருந்தாலும் விதியைக் காரணம் காட்டி உழைப்பையும் உற்சாகத்தையும் இழப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இறைவனுடைய நாட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது உண்மை தான்:அந்த ஏட்டில் இருப்பது என்ன என்பது எமக்குத்தெரியாது……………
எனவே
உழைக்கும் போது நம் கை மட்டுமே [...]